அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரைப் பயன்படுத்தி இளம்பெண் செய்த காரியம்: கரூரில் பரபரப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரைப் பயன்படுத்தி இளம்பெண் செய்த காரியம்: கரூரில் பரபரப்பு

கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண்ணை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா என்ற சபரி. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உறவினர் எனவும், அவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி பத்துக்கும் மேற்பட்டோரிடம் பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு சௌமியா மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், அப்பெண்ணைப் பிடித்து பள்ளிப்பாளையம் போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஆதாரங்களைப் பெற்ற போலீஸார், அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி இளம்பெண் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in