
அரசு மருத்துவமனையில் உதவியாளராகவும், விஏஓ வேலை வாங்கித் தருவதாகவும் கூறி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரைப் பயன்படுத்தி 7.50 லட்சம் பணமோசடி ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்னையன் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். இவரது நண்பரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தம்பிதுரை மூலம் கடந்த ஆண்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த லயோலா ரோஜாரி சர்ச் (31) மற்றும் புழல் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (42) ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அப்போது லயோலா ரோஜாரியின் தந்தை அந்தோணி(60) தனக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெருங்கிய நண்பர் என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக பிரேம்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி பிரேம்குமார் தனக்கு விஏஓ வேலையும், தங்கைக்கு அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
உடனே அந்தோணி, ரோஜாரி, மகேஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அரசு வேலை தருவதாகவும் அதற்கு ஏழரை லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி பிரேம்குமார் கடந்த பிப்ரவரி மாதம் ஏழரை லட்ச ரூபாய் பணத்தை மகேஸ்வரி வீட்டில் வைத்து லயோலா ரோஜாரி மற்றும் அவர் தந்தை அந்தோணி ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்டு மூன்று பேரும் கூறியது போல் அரசு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பிரேம்குமார் அந்தோணி, மகேஸ்வரி, லயோலா ரோஜாரி, மூவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது அவர்கள் பிரேம்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தோணி தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது என்றும் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றும் கூறி மிரட்டல் வைத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பிரேம்குமார் கடந்த 19-ம் தேதி இதுகுறித்து சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவலர் ஆணையர் புழல் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் புழல் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மூவரும் பிரேம்குமாரிடம் ஏழரை லட்சம் ரூபாய் பலத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரைச் சொல்லி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைடுத்து போலீஸார் நேற்று இரவு லயோலா ரோஜாரி மற்றும் மகேஸ்வரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைமாக உள்ள அந்தோணியை தேடி வருகின்றனர். அமைச்சர் பெயரைச் சொல்லி வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.