
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்த பிரதானக் கட்சிகள் அனைத்தும் அதனை விட்டு விலகி இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் கடந்த மக்களவைத் தேர்தலில் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களிலும் நீடித்து, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் தொடரும் நிலையே உள்ளன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் தான் இடம் பெறுவோம் என்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இன்று அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், முத்துராமலிங்கத் தேவர் இடம் பெற்றிருந்த பார்வர்ட் பிளாக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உரிய இடங்களை திமுகவிடம் கேட்டு பெறுவோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் உள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை பெறுவதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெகு தீவிரமாக முயன்று வரும் நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சி திமுகவுக்கு ஆதரவளிப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!