உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்!

உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்!

உபி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடமாக நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான 82 வயதான முலாயம் சிங் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, முலாயம் சிங்கின் உடல்நிலை மோசமானதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதனுடைய, முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முலாயம் சிங்கின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி, தேவையான உதவிகளை செய்வதாக அப்போது உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ள முலாயம் சிங் யாதவ், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 2012-ல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றபோது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்தார். வயது முதிர்வு காரணமாக கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் சிங், 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in