மு.க.அழகிரி - உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

மு.க.அழகிரி - உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரியை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் சந்தித்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் சர்வதேச ஜல்லிக்கட்டு போட்டி நாளை(ஜன.17) காலை நடைபெறவுள்ளது. இப்போட்டியை காண தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வரவேற்றனர். இதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின், மதுரை சத்யசாய் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்றார். உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் சென்றனர்.

அவர்களை வரவேற்று அழகிரி சால்வை அணிவித்தார். அழகிரி மனைவி காந்தி அழகிரியும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். உதயநிதி ஸ்டாலினும் தனது பெரியப்பா மு.க.அழகிரிக்கு புன்னகையுடன் சால்வை அணிவித்தார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் மற்றும் குடும்ப உறவுகள் மத்தியிலான சந்திப்பாகவே அமைந்திருந்தது. சந்திப்பு குறித்து மு.க.அழகிரி கூறும்போது, “பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறார்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in