மருத்துவராக மாறி உடனடி சிகிச்சை... ஆனாலும் மன வலி... வேதனைப்படும் விஜயபாஸ்கர்!

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் விஜயபாஸ்கர்
நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் விஜயபாஸ்கர்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயங்களுடன் சிகிச்சையின்றி தவித்துக் கொண்டிருந்த  நோயாளிக்கு விரைந்து சென்று சிகிச்சையளித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுகுறித்து  தனது மனவலியை  சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி உள்ளார். 

விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாலை விபத்துக்குள்ளான நபர் மிகுந்த வலியுடன் மருத்துவருக்காக காத்திருக்கும் செய்தியறிந்து, மருத்துவமனைக்கு விரைந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி திருநாளின் மறுநாள் காலை வழக்கம்போல் மிதிவண்டி பயணம் தொடர்ந்தது. அப்போது, நம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாலை விபத்துக்குள்ளான நபர் மிகுந்த வலியுடன் மருத்துவருக்காக காத்திருக்கும் செய்தியறிந்து, மருத்துவமனைக்கு விரைந்தேன். 

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

அது 5 மருத்துவர்களுக்கான பணியிடம்.  ஆனால், காலை 9.30 வரை மருத்துவர்கள் வருகை தரவில்லை. இடது கையில் எலும்பு முறிவுடன் அவதிப்பட்ட அந்நோயாளிக்கு மருத்துவர் என்ற முறையில் முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.

மக்களின் வலி நிவாரணியாக இரு‌க்க வேண்டிய அரசு மருத்துவமனை நோயாளிகளின் உயிர் காக்கும் உயரிய நேரத்தை தவற விடுவது வருத்தத்துக்குரியது. தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். நோயாளிக்கு இடது கை முறிவால் வலி; எனக்கும், மக்களுக்கும் மருத்துவர்கள் இல்லாத மன வலி. தமிழக சுகாதாரத்துறைக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே... உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in