எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள்: அன்வர்ராஜா ஒட்டிய போஸ்டரால் அதிர்ச்சி

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள்: அன்வர்ராஜா ஒட்டிய போஸ்டரால் அதிர்ச்சி

"நம் கட்சித்தலைவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள். நாங்கள் கட்சியைக் காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகிறோம்" என முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஒட்டியுள்ள போஸ்டரால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர். அக்கட்சியில் இருந்து வெளியேறி 1972 அக்.17-ல் அதிமுகவைத் தொடங்கினார். அப்போது முதல் தற்போது கட்சியை விட்டு நீக்கிய பின்னரும் கூட அதிமுக., தனது மூச்சாகவும், எம்ஜிஆரின் தீவிர பக்தராகவும் அமைச்சர், எம்.பி., வக்ப் வாரிய தலைவர், அதிமுக சிறுபான்மை பிரிவு நலச்செயலாளர், மாவட்ட செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் அன்வர் ராஜா.

ஒவ்வொரு ஆண்டும் எம்.ஜி.ஆர், பிறந்த நாள் (ஜன.17), நினைவு நாள் (டிச.24) ஆகிய தினங்களில் வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டுவது வழக்கம். கடந்த ஆண்டு டிச.24-ல் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாளில்," தலைவா! ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி, சிதறிக் கிடக்கிறது. நாங்கள் பதறித் துடிக்கிறோம். காப்பாற்றுங்கள்" என இறைவனிடம் முறையிடுவது போல் போஸ்டர் அடித்து அதிமுக உண்மை தொண்டர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் (ஜன.17) விழாவையொட்டி, அவரது பெயரில் இன்று மாலை ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில்," தலைவா! நம் கட்சித்தலைவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள். நாங்கள் கட்சியைக் காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகிறோம்" என தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஒட்டியுள்ள இந்த போஸ்டரால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in