தமிழக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்

இந்திரகுமாரி
இந்திரகுமாரி

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார்.

இவர் 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஊழல் வழக்கில் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திரகுமாரி
இந்திரகுமாரி

அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர் நாட்ரம்பள்ளி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானவர்.

இந்திரகுமாரி 2006ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த இவருக்கு இலக்கிய அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திரகுமாரி
இந்திரகுமாரி

அவரது மறைவுக்கு திமுக தலைவர்களும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in