சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை... விளாசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

"அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்" என்று, முன்னாள் அமைச்சரும், எம்.பி-யுமான சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தேனியை தவிர தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த கூட்டணி 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உடைந்து அதிமுக, தேமுதிக கூட்டணி அமைத்தும், பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கின்றன. அதனால், தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு கூட்டணிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணி

விழுப்புரம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாக்கியராஜை ஆதரித்து இன்று மாலை விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார். அப்போது, “ திமுக அமைச்சர்கள் தங்கள்மேல் உள்ள வழக்குகளைப்பற்றியே பேசிக்கொள்கிறார்கள். துறைரீதியாக என்ன நலத்திட்டங்களை செய்யலாம் என பேசுவதில்லை. பதவி ஏற்ற 48 மணி நேரத்தில் அமைச்சர் பொன்முடி தேர்தல் விதியை மீறி நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய 100 மீட்டரை கடந்து காரில் கட்சிகொடி, சின்னத்துடன் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சிக்கு உடந்தையாக உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறைமீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.

உதயநிதி மேல் கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஏதோ ஒரு மாநிலத்தில் வழக்கு தொடுப்பார்கள். அதற்கு மேல் நான் சொல்லவிரும்பவில்லை. முன்பெல்லாம் மத்திய அரசை விமர்சித்து பேசுவார். இப்போது பேசுவதில்லை. வாயாலே வளர்ந்த திமுக அதே வாயாலே அழியப்போகிறது. இத்தேர்தலுக்கு மேல் யார் யார் எங்கு இருப்பார்கள் என்றே தெரியாது. 2 வழக்கில் பாஜக மேல் முறையீடு சென்று 6 வருடத்திற்கு பின் ஏற்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கனிமொழி, திருச்சி சிவா, டி ஆர் பாலு ஆகியோர் நிலைக்குழு தலைவர்களாக உள்ளனர். ஆனால் இங்கு பாஜக எதிர்ப்பு பேசுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக கூட்டணியான விசிகவிற்கு அளிக்கும் வாக்கு பாஜவிற்கு அளிக்கும் வாக்காகும். மீண்டும் மோடி என்கிறார் அண்ணாமலை, நாங்கள் வேண்டாம் என்கிறோம். அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அண்ணாமலை யாத்திரைக்கு ஒரு கடைவிடாமல் வசூலித்தார்கள். இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு மிக பெரிய ஆபத்து. தேர்தல் வந்தால்தான் மோடி தமிழகம் வருவார்.கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர் சமுதாயம் போதையில் தள்ளப்பட்டுள்ளது. ரூ 2 ஆயிரம் கோடிக்கு போதை மருந்து கடத்தலில் கைது செய்யப்பட்டவர். திமுகவின் அயல்நாடு பிரிவு நிர்வாகியாக உள்ளார். அவர் கென்யாவில் திமுகவை வளர்த்து ஸ்டாலினை அங்கு பிரதமராக்க போகிறாரா?. வெளிநாட்டுக்கே ரூ 2000 கோடிக்கு கடத்தல் என்றால் தமிழகத்திற்கு எவ்வளவு பரவி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். இதைப்பற்றி பேசினால் ஆர்.எஸ்.பாரதி வழக்கு போட உள்ளதாக சொல்கிறார்.

ஆனால் இன்னமும் வழக்கு போடவில்லை. ஏன் போடவில்லை?. தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிக்கொண்டுள்ளது. இதை தடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இன்னொரு பஞ்சாப்பாக மாறிவிடும். ஆளுநரிடம் அளித்த கோரிக்கையில் இது குறித்து சொல்லியுள்ளோம். 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லை.

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால், நாட்டிற்கு பெரிய ஆபத்து. ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் நிர்வாக கோளாறால், பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை. மோடியும், அவரது நண்பர்களும்தான் மகிழ்ச்சியாக உள்ளனர்.தமிழ்நாடு வரும்போதெல்லாம் தமிழ் போன்ற தொன்மையான மொழி இருக்கிறதா என்றும் திருக்குறளை மேற்கோள் காட்டியும் பேசி வருகிறார் மோடி. அப்படி பேசுபவர், திருக்குறளை ஏன் தேசிய நூலாக அறிவிக்கவில்லை. தமிழக மக்களிடம் தமிழை பற்றிப் பேசி வாக்குகளை வாங்க முடியுமா என்று அவர் முயற்சிக்கிறார். வாக்குகளுக்காக நடித்து நாடகம் போடுகிறார் மோடி.

கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தமிழர்களுக்கு கூட மத்திய அரசுப் பணி வழங்கவில்லை. நெய்வேலியில் கடந்தாண்டு சேர்க்கப்பட்ட 1000 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. அதனால், மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in