ஆசிரியர் பணியிலிருந்து அரசியல் பணிக்கு வந்தவர்: கேரள முன்னாள் அமைச்சர் சிவதாச மேனன் காலமானார்

ஆசிரியர் பணியிலிருந்து அரசியல் பணிக்கு வந்தவர்: கேரள முன்னாள் அமைச்சர் சிவதாச மேனன் காலமானார்

கேரள முன்னாள் அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவதாச மேனன்(90) உடல்நலக்குறைவால் காலமானார்.

உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த சிவதாச மேனன் இன்று உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினர், பாலக்காடு மாவட்டச் செயலாளர் உள்பட பல பொறுப்புகளிலும் இருந்தவர் சிவதாச மேனன். 1987 முதல் 1991 வரை மின் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், 1996 முதல் 2001 வரை கேரள நிதி அமைச்சராகவும் இருந்தார்.

ஆசிரியர் பணியில் இருந்து அரசியல் பணிக்கு வந்தவர் சிவதாச மேனன். மன்னார்காடுவில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அதன் வழியே அரசியலுக்கும் வந்தவர். 1977-ல் இதற்கென விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1980, 1984 -ம் ஆண்டுகளில் தேர்தல் அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆனாலும் அயராத முயற்சியினால் இருமுறை ஆசிரியரும் ஆனார். சிவதாச மேனனின் மரணம் கேரல இடதுசாரிகள் வட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in