திமுக முன்னாள் எம்எல்ஏ திடீர் மரணம்...தொண்டர்கள் அதிர்ச்சி!

கே.வேணு
கே.வேணு

உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வேணு காலமானார்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கே. வேணு. இவர் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

திமுக  உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலமானது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in