பாஜகவிற்கு எதிராக போராட்டம்: சித்தராமையாவைச் சுற்றி வளைத்த போலீஸ்

கைது செய் யப்பட்ட சித்தராமையா.
கைது செய் யப்பட்ட சித்தராமையா.பாஜகவிற்கு எதிராக போராட்டம்: சித்தராமையாவைச் சுற்றி வளைத்த போலீஸ்

லஞ்சப்புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவை போலீஸார் குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணக் கெரே மாவட்டம் சென்னைக்கிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பா. இவரது மகன் பிரசாந்த், கர்நாடக அரசின் மைசூரு சாண்டல்சோப் மேம்பாட்டு வாரிய தலைவராக உள்ளார். அந்நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்க தனியார் நிறுவனத்தாரிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தினர் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுக்க பெங்களூருவில் உள்ள பிரசாந்த் அலுவலகத்துக்கு வந்தனர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.40 லட்சம் லஞ்ச பணத்தை கைப்பற்றினர். மேலும் டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது படுக்கை அறையை ரூ.6 கோடியை கைப்பற்றினர். இதேபோல பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பாவின் அலுவலகத்தில் ரூ.1.2 கோடி சிக்கியது.

இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பாவை கைது செய்ய வலியுறுத்தி கர்நாடகா அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீஸார் குண்டு கட்டாகத் தூக்கிச்சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in