இரண்டாவது முறையாக பாஜக பக்கம் தாவிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ!

முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன்
முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன்

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அதிமுக சார்பில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் 1980-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று எம்எல்ஏவாக இருந்தவர் முத்துகிருஷ்ணன். திமுகவில் சுரேஷ்ராஜன், அதிமுகவில் தளவாய் சுந்தரம் ஆகியோரின் அரசியல் வருகைக்குப் பின்பு இந்தத் தொகுதி ஸ்டார் தொகுதியானது.

அதன்பின்பு அதிமுக சார்பில் முத்துகிருஷ்ணனுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் தனக்கான வாய்ப்பே இல்லாததால் பாஜக பக்கம் சென்றார். அங்கிருந்து குறுகிய காலத்திலேயே மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவ, கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லாமல் இருந்து வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ முத்துகிருஷ்ணன். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி, குமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். முத்துகிருஷ்ணனும், அவரது குடும்பத்தினரும் காலை நாளிதழ், மாலை நாளிதழ், வேலைவாய்ப்பு நாளிதழ் ஆகியவற்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in