ஓபிஎஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் திடீர் பல்டி!- ஈபிஎஸ் பக்கம் சாய்ந்தது எப்படி?

ஓபிஎஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் திடீர் பல்டி!- ஈபிஎஸ் பக்கம் சாய்ந்தது எப்படி?

ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று திடீரென ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார். ஒன்றைத் தலைமைக்கு ஈபிஎஸ்தான் பொருத்தமானவர்கள் என்று அடித்துக் சொல்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணி- சசிகலா அணி என்று அதிமுக பிரிந்தது. அப்போது, ஓபிஎஸ் பக்கம் மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி ஆகியோர் சென்றனர். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சென்றார். அதன் பின்னர், ஓபிஎஸ்ஸுடன் இணைந்த ஈபிஎஸ் கூட்டாக பல அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். அதில் முக்கியமானது சசிகலா, டி.டி.வி.தினகன் நீக்கம். இருவரின் இந்த நடவடிக்கை அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கே.பி.முனுசாமிக்கு கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் இன்று ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை, மாஃபா பாண்டியன் நேரில் சந்தித்து ஒற்றைத் தலைமை தொடர்பாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், ``வர இருக்கிற பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆதரவு தந்துள்ளேன். அதிமுக இன்று எழுச்சி மிகு கட்சியாக மீண்டு வருவதற்கு ஒரே தலைமை, ஒரே குறிக்கோள், ஒரே கொள்ளை என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். கண்டிப்பாக கட்சி வீறு கொண்டு எழும். வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான எழுச்சியை நான் காண்கிறேன்.

ஓபிஎஸ் அணியில் இருந்து ஈபிஎஸ் அணிக்கு சென்றது ஏன்? என்று கேட்கிறீர்கள். இதில் எந்த மாறுபாடும் இல்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பதுதான் பொறுப்பாளர்களின் கடமை என்று நான் கருதுகிறேன். பெருவாரியான தொண்டர்கள் ஒரு தலைமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு வாய்ப்பு இருக்கிற ஒரு தலைவர் என்றால் இது ஈபிஎஸ் என்றுதான் நான் நினைக்கிறேன். கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் ஒற்றைத் தலைமை அவசியம். அப்படி தொண்டர்கள் விரும்புவது ஈபிஎஸ்ஸைதான். இதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ஓபிஎஸ் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் அவரும் ஒற்றைத் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு தலைமை இல்லாததால்தான் கட்சிக்கு தொடர் தோல்வி வந்து கொண்டிருக்கிறது. தோல்வி முகம் வெற்றி முகமாக மாற வேண்டும் என்றால் ஒரு தலைமை முக்கியம். இரண்டு பேரும் பிடிவாதமாக இருப்பதாக கூறுவது தவறு. இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அதிசயம் நிகழும். இருதரப்பு என்பதைவிட அனைவரும் அம்மா தரப்பு என்று நான் நம்புகிறேன்" என்று கூறிவிட்டு சென்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in