சித்திரைத் திருவிழாவிற்கு எதிராக பாஜக போராடுமா?

அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி
சித்திரைத் திருவிழாவிற்கு 
எதிராக பாஜக போராடுமா?
அ.சவுந்திரராசன்

மத ஒற்றுமையை வலியுறுத்தி மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவிற்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துவாரா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. மாநாட்டையொட்டி மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன் பேசியதாவது:

மதத்தின் பேரால் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், அதனையும் மீறி இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். மதுரையில் அடுத்த மாதம் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கும். அதற்கு முன்பாக, வண்டியூரில் உள்ள துளுக்க நாச்சியாரை அழகர் சந்தித்து விட்டுத் திரும்புவார். இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இந்த நிகழ்ச்சி கால, காலமாக நடைபெற்று வருகிறது.

முஸ்லிம்கள் என்பதற்காக ஹிஜாப் போடும் பெண்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பாஜவின் அண்ணாமலையைப் பார்த்துக் கேட்கிறேன். சித்திரைத் திருவிழாவில் துளுக்க நாச்சியார் வீட்டிற்கு அழகர் போகக்கூடாது என்று பாஜக போராட்டம் நடத்த தயாரா? என்று அ.சவுந்திரராசன் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.