'நான் திராவிடன்' என்ற அண்ணாமலைக்கு, 'கருப்பு திராவிடன்' யுவன் பதிலடி!

'நான் திராவிடன்' என்ற அண்ணாமலைக்கு, 'கருப்பு திராவிடன்'  யுவன் பதிலடி!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்லும் வகையில், பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஐந்து நாட்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, " நானும் திராவிடன் தான்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, கருப்பு நிற வேஷ்டி மற்றும் கருப்பு நிற டீ - சர்ட் அணிந்தபடி கடற்கரை ஓரத்தில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்று பகிர்ந்துள்ளார். அதில், ‘கருப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்’ என்ற வாசகத்தைப் பதிவிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்லும் வகையில் பதிவிடப்பட்டுள்ள யுவன்சங்கர் ராஜாவின் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் கொண்ட டீ-சர்ட் அணிந்து யுவன்சங்கர்ராஜா வெளியிட்ட புகைப்படும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in