போலி ஆபாச வீடியோ... பதறிய மார்க்சிஸ்ட் வேட்பாளர்: சிக்கிய காங்கிரஸ் கட்சியினர்

போலி ஆபாச வீடியோ... பதறிய மார்க்சிஸ்ட் வேட்பாளர்: சிக்கிய காங்கிரஸ் கட்சியினர்
மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப்

கேரளத்தின் திருக்காக்கரைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 31-ம் தேதி நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் குறித்து போலியான ஆபாச வீடியோ தயாரித்து வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளத்தின் திருக்காக்கரைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் டாக்டர் ஜோ ஜோசப்பிற்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் போலியாக ஆபாச வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மண்டலத் தலைவர்கள் சுதாகர், சிவதாசன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் இருந்தே வேறு ஏதோ ஆண் மற்றும் பெண்ணின் வீடியோவை போலியாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின், கேரள மாநில செயற்குழு உறுப்பினர் சிவராஜூ இதுதொடர்பாக கொடுத்த புகாரின் பேரிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் வேட்பாளரான ஜோ ஜோசப் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய நோய் நிபுணராக உள்ளார். காங்கிரஸ் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்த தாமஸ் உயிரிழந்தார். அவரது மறைவினால் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் தாமஸின் மனைவி உமா தாமஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in