நாகாலாந்து வரலாற்றில் முதன்முறை: சட்டப்பேரவைக்கு செல்லும் பெண் எம்எல்ஏ

வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு
வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு நாகாலாந்து வரலாற்றில் முதன்முறை: சட்டப்பேரவைக்கு செல்லும் பெண் எம்எல்ஏ

நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார்.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் பா.ஜ.க. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜ.க. கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதுபோல காங்கிரஸ் 23 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதியிலும், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது. நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் 74.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 39 இடங்களில் அந்தக்கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி ஒரு இடங்களிலும், பிற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னிலை இருந்து வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

இந்த நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார். திமாபூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி கட்சி வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in