மதுரையில் பதற்றம்... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., காருக்கு தீவைப்பு!

மதுரையில் பதற்றம்... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., காருக்கு தீவைப்பு!

மதுரை அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ.வின் உறவினர்களின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீ வைத்து எரிக்கப்பட்ட கார்
தீ வைத்து எரிக்கப்பட்ட கார்

கடந்த 2001 - 2006 ம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியின் அதிமுக  சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பொன்னம்பலம். மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவர்களது  உறவினர்களின் வீடுகள் உள்ளது. பெரும்பாலானவர்களின் வீடுகளில்  கார்கள் உள்ளது. அவர்களில் பிரபு மற்றும் வேலுமணி ஆகியோரது வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை நேற்று நள்ளிரவில்   மர்ம நபர்கள்  சிலர் தீ வைத்து எரித்துச் சென்றுள்ளனர்.

திடீரென கார்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்ட எம்எல்ஏவின் உறவினர்கள் இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் கார்களின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளன. கார் எரிப்பு சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜுன் 25ம் தேதி கருவனூரில் உள்ள  கோயிலில் முதல் மரியாதை அளிப்பதில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் இடையே மோதல் ஏற்பட்டது.  அதன் விளைவாக அன்றைய தினம் இரவு பொன்னம்பலத்தின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் உறவினர்களது கார்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in