ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் திடீர் வழக்குப்பதிவு: காரணம் என்ன?

ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் திடீர் வழக்குப்பதிவு: காரணம் என்ன?

அதிமுக அலுவலக வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் கடுமையான மோதல் வெடித்தது.

இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் அதிமுக அலுவலக கதவை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடைத்தனர். இந்த கலவரத்தைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஈபிஎஸ் ஆதரவாளர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in