‘சும்மா விடக்கூடாது’ நிதியமைச்சர் ஆடியோ விவகாரத்தில் எகிறியடிக்கும் ஈபிஎஸ்!

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

30 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக நிதியமைச்சர் பேசியிருப்பது உண்மை. அது அவருடைய குரல்தான், இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையைக் கண்டறிய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிதியமைச்சர் பிடிஆர் ஆடியோவை ஒலிப்பரப்பி அனைவரும் கேட்கச் செய்தார். “இந்த ஆடியோவை கேட்டுவிட்டு சொல்லுங்கள் இது புனையப்பட்டதா, உண்மையானதா, போலியானதா என்பதை சொல்லுங்கள். இவரே பேசிவிட்டு, இவரே பொய் என்று எப்படி சொல்ல முடியும். இதை ஆய்வு செய்ய வேண்டும்.

30 ஆயிரம் கோடி ரூபாய் என்பது சாதாரண விஷயம் இல்லை. நிதி அமைச்சரே இதை சொல்லி இருக்கிறார். இது காட்டுத்தீ போல பரவிக்கொண்டு இருக்கிறது. ஊடகங்கள் இதைப் பற்றி பேச வேண்டும். எங்களுக்கு பெரிய சந்தேகமே அவர் இதற்கு பதில் அறிக்கை விட்டது தான். அவரின் அறிக்கைக்குப் பின்னர் இது பெரிய சந்தேகம் அளிக்கிறது. இதை கேட்டால் யார் வேண்டுமானாலும் எளிதாக சொல்ல முடியும். இது அவருடைய குரல்தான்.

30 ஆயிரம் கோடி பணத்தை எங்கே வைப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பம் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. நிதி அமைச்சர் பேசுவது சாதாரண விஷயம் கிடையாது. முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படி எல்லாம், ஆதாரமும் உண்மையும் அற்ற புகார்களை வைத்தனர்?

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம். 2 வருடத்தில் இவர்கள் பெரிதாக கொள்ளையடித்துவிட்டனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பணத்தை எல்லாம் கொள்ளையடித்துவிட்டனர்.

பிடிஆர் சொன்னதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் நியாயமானவர் என்றால் அதை பற்றி விசாரிக்க வேண்டும். மத்திய அரசிடம் இதை பற்றி விசாரிக்க நாங்கள் வலியுறுத்துவோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in