`விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை': அடித்துச் சொல்லும் நிதியமைச்சர்

`விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை': அடித்துச் சொல்லும் நிதியமைச்சர்
பழனிவேல் தியாகராஜன்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மதுரை மகபூப் பாளையம் பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தில் நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, "குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நகைக் கடன் தள்ளுபடி, ரூ.4000 கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் ஊக்கத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in