`கேவலமான கேள்விகள் கேட்டனர்'– வெளிநடப்பு செய்த மஹுவா மொய்த்ரா ஆவேசம்!

`கேவலமான கேள்விகள் கேட்டனர்'– வெளிநடப்பு செய்த மஹுவா மொய்த்ரா ஆவேசம்!

நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மிகவும் கேவலமான கேள்விகளை கேட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வெளிநடப்பு செய்தார். 

அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் புகாா் அளித்தார்.

தா்ஷன் ஹீராநந்தானியும் இதனை ஒப்புக் கொண்டதை அடுத்து, இதுகுறித்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று மஹுவா மொய்த்ரா எம்.பி. நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக  ஆஜரானார். 

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

அப்போது மஹுவா மொய்த்ரா எங்கெங்கு சென்றார், எங்கு தங்கினார் போன்ற கேள்விகளை நாடாளுமன்றக் குழு கேட்டதாக தெரிகிறது. மேலும் மொபைல் போன் ரெக்கார்டிங்கை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து மிகவும் கேவலமாக கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறி மஹுவா மொய்த்ரா மற்றும் குழுவில் இருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

குழுத் தலைவரின் கேள்விகள் கண்ணியமற்ற மற்றும் நெறிமுறையற்ற வகையில் இருந்ததாக காங்கிரஸ் எம்.பி.யும் குழு உறுப்பினருமான உத்தம் குமார் ரெட்டி கூறியுள்ளார். ஆனால், மொய்த்ரா நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குழுவின் தலைவர் வினோத் சோங்கர் கூறியுள்ளார்.

எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஆலோசித்து முடிவு செய்யும் என்று குழுவின் தலைவர் வினோத் சோங்கர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in