'இந்தியாவுக்கான போராட்டத்தில் எந்த விலையையும் கொடுக்கத் தயார்' - தகுதி நீக்கம் குறித்து ராகுல் காந்தி கருத்து

ராகுல் காந்தி
ராகுல் காந்தி'இந்தியாவுக்கான போராட்டத்தில் எந்த விலையையும் கொடுக்கத் தயார்' - தகுதி நீக்கம் குறித்து ராகுல் காந்தி கருத்து

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, “ இந்தியாவுக்கான போராட்டத்துக்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்” என்று கூறினார்.

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் பொது மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், ராகுல் காந்தி இன்று மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள இந்த தகுதிநீக்கத்துக்கு எதிராக, பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தகுதி நீக்க அறிவிப்புக்குப் பின்னர் முதன்முறையாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “நான் இந்தியாவின் குரலுக்காகப் போராடுகிறேன். இதற்காக நான் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

மக்களவைச் செயலகம் கேரளாவின் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் தொகுதியை காலியாக இன்று அறிவித்தது. அந்த இடத்திற்கான இடைத் தேர்தலை இப்போது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்க முடியும். டெல்லியில் உள்ள தனது அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஒருவேளை, இந்த தண்டனை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யாவிட்டால், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in