ஈரோட்டில் சூறாவளிப் பிரச்சாரம்; ஒரே நாளில் குவியும் தலைவர்கள்!

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்ஈரோட்டில் அனல் பறக்கும் பிரச்சாரம்; ஒரே நாளில் குவியும் தலைவர்கள் !

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவிற்கு 7 நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இன்று சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன், பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் இன்று மாலை பிரச்சாரத்தில் இறங்குகின்றனர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்றும் நாளையும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் அண்ணாமலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை வீரப்பன்சத்திரம், திருநகர் காலனி, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகர், கிருஷ்ணா தியேட்டர், வி.வி.சி.ஆர் நகர் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பிரச்சாரம் வரும் 25ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in