'எவ்வளவு கடன்களையும் வாங்குங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்வோம்' - ஜேடிஎஸ் எம்எல்ஏ உறுதி

'எவ்வளவு கடன்களையும் வாங்குங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்வோம்' - ஜேடிஎஸ் எம்எல்ஏ உறுதி

விவசாயிகள் எவ்வளவு கடன்களை வேண்டுமானாலும் வாங்க வேண்டும். மாநிலத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 24 மணி நேரத்தில் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவும், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி உறுதியளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராமநகராவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா குமாரசாமி, "குமரண்ணா [குமாரசாமி] மீண்டும் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்துள்ளார். அதனால் விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவர் கடன்களை தள்ளுபடி செய்வார். உங்களுக்கு பிரச்சனை இல்லை" என்று கூறினார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஜேடி(எஸ்) தயாராகி வரும் நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான ராமநகரா தொகுதி வேட்பாளராக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகனும், கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான நிகில் குமாரசாமியை கட்சி தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் தற்போது அனிதா குமாரசாமி எம்எல்ஏவாக உள்ளார்.

ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடைபெறவுள்ள தேர்தலுக்காக, மாநிலத்தில் முதன்முதலாக வேட்பாளர்களை அறிவித்த அரசியல் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in