டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி... தமிழகம் வந்தது அஸ்தி; கோவையில் மரியாதை!

கோவை வந்த விவசாயி சுப்கரன் சிங் அஸ்திக்கு அஞ்சலி
கோவை வந்த விவசாயி சுப்கரன் சிங் அஸ்திக்கு அஞ்சலி

டெல்லி போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான பஞ்சாப் விவசாயியின் அஸ்தி கலசம் கோவை வருகை தந்த நிலையில், ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் சார்பில் அஸ்தி கலசத்துக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து டெல்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகளை ஹரியாணா அரசு எல்லையில் தடுத்து நிறுத்தி உள்ளது. பஞ்சாபின் கனெளரி எல்லையிலிருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர். அப்போது அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை ஹரியாணா போலீஸாா் வீசினா். அப்போது ஏற்பட்ட மோதலில் 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தாா்.

கோவை வந்த விவசாயி சுப்கரன் சிங் அஸ்திக்கு அஞ்சலி
கோவை வந்த விவசாயி சுப்கரன் சிங் அஸ்திக்கு அஞ்சலி

விவசாயி சுப்கரன் சிங் மரணத்துக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மரியாதை செலுத்தவும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா அமைப்பின் சார்பில் சுப்ரகன் சிங்கின் அஸ்தி கலசம் நாடு முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்த சுப்ரகன் சிங்கின் அஸ்திக்கு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை வந்த விவசாயி சுப்கரன் சிங் அஸ்திக்கு அஞ்சலி
கோவை வந்த விவசாயி சுப்கரன் சிங் அஸ்திக்கு அஞ்சலி

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் வே.ஆறுச்சாமி, கலங்கல் வேலு, தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் நேரு தாஸ், தமிழ் புலிகள் கட்சியின் இளவேனில், வெள்ளியங்கிரி மலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் காமராசு, கே.கே.எம் கேரளா ஒருங்கிணைப்பாளர் பி.டி.ஜான், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சண்முகசுந்தரம், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருஞான சம்பந்தம், ஒட்டுமொத்த பழங்குடி மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் செல்வராஜ், நந்தகுமார், காவேரி வைகை நதிகள் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் மயில்சாமி, காரமடை தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in