போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் விரைவில் இறுதி அறிக்கை: தமிழக அரசு விளக்கம்!

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் விரைவில் இறுதி அறிக்கை: தமிழக அரசு விளக்கம்!

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் 41பேர் மீது நீதிமன்றத்தில் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆளுநரைச் சந்தித்த அண்ணாமலை, டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை என அண்ணாமலை ஆளுநரிடம் புகாரளித்த நிலையில், இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ‘2019 செப்டம்பரில் மதுரையில் 4 முகவர்கள் கைதான நிலையில் அவர்களிடமிருந்து 124 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர் புலன் விசாரணையில் 51 பேர் முறைகேடாக இந்திய பாஸ்போர்ட்டை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 இலங்கை தமிழர்கள், 11 பயண முகவர் என 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 175 பாஸ்போர்ட்டுகளில் இலங்கை தமிழர்கள் போலி ஆவணம் மூலம் 28 பாஸ்போரட் பெற்றது அம்பலமாகி உள்ளது. அந்த 28 இலங்கை நபர்கள் மீது மதுரை நகர க்யூ பிரிவில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், 14 பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மதுரை க்யூ பிரிவு போலீஸ் புலன் விசாரணையை முடித்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in