ஊதிய பாக்கியை உடனே கொடுங்கள் - முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்

முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு இருக்கும் நியாயவிலைக் கடை ஊழியர்கள்
முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு இருக்கும் நியாயவிலைக் கடை ஊழியர்கள்ஊதிய பாக்கியை உடனே கொடுங்கள் - முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்

தங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின்  இல்லத்தை நியாய விலைக் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  முற்றுகையிட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 

புதுச்சேரி  கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் 336 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு  வருகின்றன. இந்த கடைகளில் 580 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் இதன்  ஊழியர்கள் அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள், அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அரசோடு நடத்திய பேச்சு வார்த்தையில் நியாய விலைக் கடைகளை திறந்து சம்பளம் வழங்கப்படும் எனவும்,  நிலுவை சம்பளம் கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது .இதனால் தங்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கும்படி  வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்காக  ஏராளமான ஊழியர்கள் திரண்டு ரங்கசாமி இல்லத்திற்கு சென்றனர்.

முதலமைச்சர் இல்லத்தை அவர்கள் முற்றுகையிட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமியும் இல்லத்தில் இருந்த மைதானத்தில் இறகு பந்து விளையாடிக் கொண்டிருந்தார். பொறுமையாக விளையாடி முடித்துவிட்டு இவர்களிடம் பின்னர் வந்தார். ஊழியர்கள்   முதலமைச்சரிடம் நியாய விலைக் கடைகளை  திறக்க வேண்டும், நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். ஆனால் தான் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகியுள்ளது, கோரிக்கைகளை ஒவ்வொன்றாகத்தான் நிறைவேற்ற முடியும் என்று அவர்களிடம் முதல்வர் பதில் அளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in