`இனத்துரோகம், நம்பிக்கைத்துரோகம்தான் அதிமுகவின் அடையாளம்'

முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் காட்டம்
ஓபிஎஸ், ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ்hindu கோப்பு படம்

"அதிமுக கடந்த ஆட்சியில் பாஜகவோடு இணைந்து தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்கள் ஏராளம்" என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இனத்துரோகத்தின் அடையாளமாகவும், நம்பிக்கைத் துரோகத்தின் உச்சமாகவும் இருக்கின்றன. அதிமுக அரசியல் அனாதையாக வேண்டும். அதே சமயம், இந்த தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. மாறாக, சமூக தலைதளங்கள், ஊடகங்கள் வழியாக அதிமுகவின் எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கருணாஸ்
கருணாஸ்hindu கோப்பு படம்

அதிமுக கடந்த ஆட்சியில் பாஜகவோடு இணைந்து தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்கள், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இடஒதுக்கீடு, விவசாய உரிமைகள், காவிரி பிரச்சினை, மேக்கேத்தாட்டு அணை விவகாரம் அனைத்தும் பாஜகவோடு துணையோடு தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது என்று மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை. அவர் அன்று முதல்வராக இருந்ததற்கு காரணம் ஜெயலலிதா மறைந்ததுதான். ஓபிஎஸ் தனி அணியை உருவாக்கியதும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக்கூடிய துரோகியாகவே மாறினார்.

கடந்த அதிமுக செய்த இனத்துரோகத்தை தற்போதைய அரசு எக்காரணம் கொண்டும் பின்பற்றிவிடக்கூடாது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதை போலவே சீர்மரபினரில் உள்ள மீதமுள்ள சமுதாயத்தினருக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். அதிமுகதான் தவறிழைத்துவிட்டது என்று திமுகவும், திமுகதான் தவறு செய்தது என்று அதிமுகவும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் மக்களுக்கான உரிமைகள் கடைசிவரைக் கிட்டாது. ஆகவே, அதிமுக செய்த துரோகங்கள் மக்களுக்கு தெரியும். அதற்கு மக்கள் பதில் தருவார்கள். தற்போதைய தமிழக அரசு, எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in