தெலங்கானாவில் பரபரப்பு... பிஆர்எஸ் கட்சிக்கு முன்னாள் அமைச்சர் முழுக்கு... காங்கிரஸ் மகிழ்ச்சி!

தெலங்கானா முன்னாள் அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ்
தெலங்கானா முன்னாள் அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ்

தெலங்கானா முன்னாள் அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ் பாரத ராஷ்டிர சமிதியில் (பிஆர்எஸ்) இருந்து இன்று ராஜினாமா செய்தார். ராகுல் காந்தி நாளை பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் நாகேஸ்வர ராவ் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.

தும்மல நாகேஸ்வர ராவ்
தும்மல நாகேஸ்வர ராவ்

தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் பிஆர்எஸ் கட்சியில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனால், பிரிக்கப்படாத கம்மம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஏ. ரேவந்த் ரெட்டி, மாநில ஏஐசிசி பொறுப்பாளர் மாணிக்கராவ் தாக்ரேயை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ஒரு நாள் கழித்து நாகேஸ்வர ராவ் பிஆர்எஸ்ஸில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த மாதம் நாகேஸ்வர ராவை காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், நாளை (செப்.17) மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பேசும் பொதுக்கூட்டத்தில் தும்மல நாகேஸ்வர ராவ் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்.

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சமீபத்தில் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஜிட்டா பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் யென்னம் சீனிவாச ரெட்டி ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்.

கம்மம் முன்னாள் எம்பியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவருமான பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி கட்சியில் இணைந்ததையடுத்து காங்கிரஸ் ஏற்கெனவே உற்சாகத்தில் இருந்தது. இந்த நிலையில் பிஆர்எஸ், பாஜகவைச் சேர்ந்த பலர் கட்சியில் சேர்வதால் காங்கிரஸ் மேலும் உற்சாகமடைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in