எப்படி ஊழல் செய்வது என ரூம் போட்டு ஆலோசிக்கிறார் செந்தில் பாலாஜி: ஜெயக்குமார் சாடல்

எப்படி ஊழல் செய்வது என ரூம் போட்டு ஆலோசிக்கிறார் செந்தில் பாலாஜி: ஜெயக்குமார் சாடல்

``தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வாக ரீதியாக துறையை மேம்படுத்த நினைக்காமல், எப்படியெல்லாம் ஊழல் செய்வது என்பது குறித்து ரூம் போட்டு ஆலோசித்து, அவற்றை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பது குறித்து திட்டமிடுகிறார்'' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள பேரணி இடம் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "தமிழக அரசின் சாதனை என்று சொன்னால் தமிழக மக்கள் அனைவரையும் மதுவுக்கு அடிமையாக மாற்றியது தான் சாதனை. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிந்த சம்பவம் மறையாத நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்திய செந்தில் குமார் என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தைப் பார்க்கும் பொழுது, தமிழக அரசு மதுபான கடைகளில் கலப்பட சரக்கு விற்பனை செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்தும், நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மதுபான கடையில் மது அருந்திய செந்தில்குமார் உயிரிழந்த விவகாரம் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினால் தான் உண்மை நிலைமை தெரியவரும். தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வாக ரீதியாக துறையை மேம்படுத்த நினைக்காமல், எப்படியெல்லாம் ஊழல் செய்வது என்பது குறித்து ரூம் போட்டு ஆலோசித்து, அவற்றை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பது குறித்து திட்டமிடுகிறார். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறார். தமிழகத்தில் மின்துறையை கவனிக்க ஆள் இல்லாமல் ஆங்காங்கே மின்வெட்டு நிலவுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின்விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலைமாறி இப்போது மின்வெட்டு அதிகரித்து உள்ளது.

தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர்களை கைது செய்திருந்தால் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டிருக்காது. திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் தமிழகமே போதையில் தள்ளாடி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை மாற்றி, எங்கும் பார் எங்கும் சரக்கு என தமிழகத்தையே திமுக அரசு மாற்றிவிட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in