13 மாதங்கள் சிறை - ஜாமீனில் வெளியே வந்தார் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்!

13 மாதங்கள் சிறை - ஜாமீனில் வெளியே வந்தார் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்!

பணமோசடி வழக்கில் 13 மாதங்கள் சிறையில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக், இன்று மும்பை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற சிபிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த மும்பை உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் பெற்ற பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இன்று விடுவிக்கப்பட்டார். அவர், "நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பொய் வழக்கில் நான் சிக்கியிருப்பதை உயர்நீதிமன்றம் கவனித்துள்ளது" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அனில் தேஷ்முக் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல், மூத்த தலைவர்கள் அஜித் பவார், சகன் புஜ்பால் உள்ளிட்ட பலரும் ஆர்தர் ரோடு சிறைக்கு வெளியே அவரை வரவேற்க திரண்டனர். சிறைக்கு வெளியே காத்திருந்த என்சிபி தலைவர்கள், அனில் தேஷ்முக் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்ததாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக 2021ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அனில் தேஷ்முக்கிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in