குஜராத் முன்னாள் அமைச்சர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்!

குஜராத் முன்னாள் அமைச்சர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்!

பாஜகவில் இருந்து விலகிய குஜராத் முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸில் இணைந்தார்.

இந்த மாத தொடக்கத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ராஜினாமா செய்த குஜராத் முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அகமதாபாத்தில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டும் வியாஸை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்றார்.

நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெய் நாராயண் வியாஸ். இவர் நவம்பர் 5-ம் தேதி பாஜகவில் இருந்து விலகினார். வியாஸின் மகன் சமீர் வியாஸும் அகமதாபாத்தில் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸில் இணைந்தார். பாஜகவிலிருந்து விலகியது குறித்து பேசிய வியாஸ், “ பாஜகவில் கோஷ்டிவாதம் தலைதூக்கியுள்ளது. அவர்கள் தலைவர்களை அகற்றுவதற்கும் மாற்றுவதற்கும் ஒவ்வொருவராக இலக்கு வைக்கிறார்கள்" என்று கூறினார்.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in