பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்பு படம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

உயர்வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான 10% சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் தனித்தனியே தீர்ப்பினை வாசித்தனர். இதில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.

ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுக்கும் ஒரு கால நிர்ணயம் தேவை என நீதிபதி பர்திவாலா தெரிவித்துள்ளார். “அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது . 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமத்துவத்துக்கு எதிரானதாக அமையவில்லை” என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பளித்துள்ளார். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3:2 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த இடஒதுகீடு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in