ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அபார வெற்றி; அதிமுக படுதோல்வி- டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி, தேமுதிக!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- முதல்வர் ஸ்டாலின்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- முதல்வர் ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அபார வெற்றி; அதிமுக படுதோல்வி: டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி, தேமுதிக!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 65 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. நாம் தமிழர் கட்சி, தேமுதிக டெபாசிட் இழந்து இருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனாவும், தேமுதிக சார்பில் ஆனந்த்தும் போட்டியிட்டனர். மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த தேர்தலில் 74 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலை முதல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,09,959 வாக்குகள் பெற்று பெற்றார். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,553 வாக்குகள் பெற்று டெபாசிட் பெற்றார். மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7,984 வாக்குகள் வாங்கி டெபாசிட் இழந்தார். தேமுதிக வேட்பாளர் 949 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் செய்தபோது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழப்பார் என்று கூறியிருந்தார். இதில் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை விட 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்று இருக்கிறார். இளங்கோவனின் வெற்றியை காங்கிரஸ் மற்றும் கூட்டணியை கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in