
ஈரோடு கிழக்கு சட்டடமன்றத் தொகுதி உ றுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போது நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.