திமுக எம்.பி கனிமொழிக்கு பாஜக வழங்கிய பதவி!

கனிமொழி
கனிமொழி

திமுகவில்  துணைப்பொதுச்செயலாளர் பதவி,  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்பாராத விதமாக அவருக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவில் முக்கிய பொறுப்பு பாஜக அரசால்  அளிக்கப்பட்டுள்ளது அரசியல் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மத்தியில் ஆளும்  பாஜக அரசு, நாடாளுமன்ற நிலைக்குழுக்களை அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. அவற்றில்  திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு, தொழில்துறை நிலைக்குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.  கனிமொழி வசம் ஏற்கெனவே உரங்கள் நிலைக்குழு இருந்தது. தற்போது அதனை மாற்றி, கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

31 எம்.பிக்களைக் கொண்ட  இந்த நிலைக் குழுவின் தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிராமப்புறங்களின் நிலைமை, அவற்றின் மேம்பாடு உள்ளிட்டவற்றை   ஆய்வு செய்யும் அதிகாரம் கொண்டது இக்குழு. இவ்வளவு பெரிய பொறுப்பு,  பாஜகவைத் தொடர்ந்து எதிர்த்து வரும் திமுகவைச் சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை கனிமொழி எம்.பி. இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு கட்சியில்  காலியாக இருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று திமுகவில் ஏராளமானோர் தலைமையை வலியுறுத்தி வரும் நிலையில்  எதிர்வரும்  ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி  அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in