‘நீட் விவகாரம் குழந்தையும் அறியும்; அதிமுக செய்வது பொய் பிரச்சாரம்’ -அமைச்சர் மா.சு சீற்றம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வு குறித்து குழந்தைக்கூட தெரியும்; அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘’நீட் தேர்வு குறித்து திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குழந்தைக்கூட தெரியும். ஆனால் அதிமுக வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்கிறது’’ என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீற்றம் காட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சார களத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘’ ஈரோட்டில் தான் அதிக அளவிலான அரசு மருத்துவமனைகள் உள்ளன. எங்களை பார்க்கும் மக்கள் எல்லாம் இந்த நல்லாட்சிக்குத்தான் வாக்களிப்போம் என தெரிவிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உதித்த சூரியன் ஈரோடு கிழக்கிலும் உதிக்கும்.

நீட் தொடர்பாக திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குழந்தைகளுக்குக் கூட தெரியும் ஆனால் அதிமுக திட்டமிட்டே அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பொய் பிரச்சாரத்தை செய்கிறார்கள். மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். நிச்சயம் இந்த இடைத்தேர்தலில் அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிப் பெறுவோம்’’ என்று உறுதி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in