'நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டு போட்டுப் போராடுகிறார்கள்’- அமைச்சர் எ.வ.வேலு சர்ச்சை பேச்சு

'நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டு போட்டுப் போராடுகிறார்கள்’- அமைச்சர் எ.வ.வேலு சர்ச்சை பேச்சு

``போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டால் நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு போராட்டத்திற்கு வந்துவிடுகிறார்கள்'' என அமைச்சர் எ.வ.வேலு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அமைச்சர் பேசும் போது, “இன்றைக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. குடும்பத்திற்கு ஒரு கார் அல்ல. குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரும் கார் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அளவிற்குச் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. போக்குவரத்து வாகனங்கள் பெருகி இருப்பதால் சாலைகளில் நெருக்கடி ஏற்படுகிறது.

சாலை நெருக்கடி காரணமாகச் சாலைகளை விரிவாக்கம் செய்ய பணிகளை மேற்கொண்டால், நிலமில்லாதவர்கள் கூட பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு என்னுடைய நிலத்தை எடுக்காதீர்கள் எனப் போராட வந்துவிடுகிறார்கள். இன்றைக்கு இருக்கும் வாகனப் பயன்பாட்டைப் பார்க்கும் போது சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை” என்றார். அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in