`ஈரோடு கிழக்கு எங்க தொகுதி; நாங்கள்தான் நிற்போம்'- அடித்துச்சொல்லும் கே.எஸ்.அழகிரி

`ஈரோடு கிழக்கு எங்க தொகுதி; நாங்கள்தான் நிற்போம்'- அடித்துச்சொல்லும் கே.எஸ்.அழகிரி

``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும். மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து இன்று ஆதரவு கேட்க உள்ளேன்'' என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகரி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கே.எஸ் அழகிரி கலந்துக் கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தான் நிற்கும். இது எங்களுடைய தொகுதி. நாங்கள் நின்று வென்ற தொகுதி. எங்களின் கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்க உள்ளோம். இன்று மாலை அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம். எனவே காங்கிரஸ் தான் நிற்கும்'' என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in