ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளரை அறிவித்தார் டி.டி.வி.தினகரன்

அமமுக வேட்பாளர் சிவப்பிரசாத்
அமமுக வேட்பாளர் சிவப்பிரசாத் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளரை அறிவித்தார் டி.டி.வி.தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டிருக்கிறார். திமுக கூட்டணி கட்சியினர் அந்தத் தொகுதியில் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். அதே நேரத்தில் இந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வத்தின் அணியும் களமிறங்குகிறது. ஆனால் இதுவரைக்கும் அவர்கள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதோடு கூட்டணி கட்சிகளை சந்தித்து இரு அணியினரும் ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இதனுடைய எடப்பாடி பழனிசாமி நேற்றும் இன்றும் பல மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென முறையீடு செய்தது. இந்த முறையீட்டை வரும் திங்கட்கிழமை செய்யும் பணி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அறிவித்துள்ளார். அமமுக வேட்பாளர் சிவபிரசாத் கட்சியின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வோம் என்றும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவு வழங்கக்கோரி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காது என்றும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in