`திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிகரிப்பு; இடைத்தேர்தலில் எங்களுக்குத்தான் வெற்றி'-சொல்கிறார் ஜி.கே.வாசன்

`திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிகரிப்பு; இடைத்தேர்தலில் எங்களுக்குத்தான் வெற்றி'-சொல்கிறார் ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 2021 தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் அந்த தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த அடிப்படையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜி.கே. வாசனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், இரு தினங்களுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். எங்களை பொறுத்தவரை அதிமுக கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்பதே. மாநிலத்தில் மக்களின் மனநிலை பிரதிபலிக்காமல் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. அதனால் எங்கள் கூட்டணிக்கு சாதமான சூழல் அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அறிவிப்போம். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான வாக்குகள் அதிகரித்துள்ளது அதனால் நிச்சயம் நாங்கள் வெற்றிப் பெறுவோம்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in