ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் யார்?: சீமான் பேட்டி

சீமான்
சீமான்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பெண் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் எம்.ல்ஏ திருமகன் ஈவெரா அண்மையில் உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து பிப்.27-ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ் தனித்து தேர்தலைச் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.அமமுக சார்பில் வேட்பாளரை அறிவிப்போம் என டிடிவி.தினகரனும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ ஜன. 29-ம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்த உள்ளோம். தேர்தலில் நான் நிற்கவில்லை. ஈரோடு கிழக்கில் பெண் வேட்பாளரை நிறுத்த உள்ளோம் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in