ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பிப்.16-ம் தேதி முதல் பிப். 27-ம் தேதி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, தேமுதிக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கருத்துக்கணிப்புகளும் அந்த தொகுதி மக்களிடையே நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘’1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பிப்.16-ம் தேதி காலை 7 மணியிலிருந்து பிப்.27-ம் தேதி மாலை 7 மணி வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றப் பிறகு கருத்துக்கணிப்புகளை வெளியிட எந்த தடையும் இல்லை’’ என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in