`ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை, ஆதரவும் இல்லை'- சரத்குமார் அறிவிப்பு

நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார்சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கில் போட்டியில்லை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட விரும்பவில்லை என்றும் அதே வேளையில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததை அறிவீர்கள்.

மேலும், நேற்று  மாலை உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில்,  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர, சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்‘’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in