ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தமாக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆதரவு கேட்டார்.

அவருடன் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்று மாலை 4 மணிக்கு, சென்னை தி.நகரில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

அண்ணாமலையைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட தலைவர்களை ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தும் இன்று அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in