ஈபிஎஸ் அணியினர் சந்தித்த நிலையில் அண்ணாமலையுடன் ஓபிஎஸ் பேச்சு: பாஜக ஆதரவா, போட்டியா?

ஈபிஎஸ் அணியினர் சந்தித்த நிலையில் அண்ணாமலையுடன் ஓபிஎஸ் பேச்சு: பாஜக ஆதரவா, போட்டியா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை தி. நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்த நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சுமார் அரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர் செல்வம் தனது பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தொடர்ந்து சந்தித்து ஆதரவை கேட்ட நிலையில் அண்ணாமலை, தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்து மேலிடத்துக்கு தெரிவிப்பார். அதன் பிறகு, பாஜக போட்டியிடப்போகிறதா அல்லது யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறது என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in