ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று (ஜன.31) தொடங்குகிறது.

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஆனால் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி ஐந்து ஞாயிறு என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் பிப்.7-ம் தேதியாகும். வேட்புமனுக்கள் மீது பிப். 8-ம் தேதி மறு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்பப் பெற பிப்.10-ம் தேதி கடைசி நாளாகும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்.3-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன், தேமுதிக சார்பாக ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பாக சிவ பிரசாந்த் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். தற்போது வரை அதிமுகவில் ஈபிஎஸ் அணி சார்பிலும், ஓபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in