ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடு புகார் எதிரொலி: தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனைஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மீது இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கானொலிக் காட்சி வாயிலாக ஆலோசிக்க உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. குறிப்பாக முறைக்கேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சியான அதிமுக நாள்தோறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து வருகிறது. தேமுதிக இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புகார் தொடர்பாக இந்திய தேர்தல் ஆனையத்தின் துணை ஆணையர் அஜய் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, ஈரோடு மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in